கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் நேற்று மின்உற்பத்தி தொடங்கியது.

Update: 2021-05-28 19:01 GMT
வள்ளியூர்:
கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் நேற்று மின்உற்பத்தி தொடங்கியது.

தொழில்நுட்ப கோளாறு

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணுஉலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 2-வது அணு உலையில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகள் சரி செய்யும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர்.

மின்உற்பத்தி தொடங்கியது

இந்த நிலையில் அணு உலையில் ஏற்பட்ட கோளாறு நேற்று சரிசெய்யப்பட்டது. இதையடுத்து 2-வது அணுஉலையில் அதிகாலை முதல் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. தற்போது அதில் 450 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதுபடிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

முதலாவது அணுஉலையில் ஏற்கனவே ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்