சூதாடிய 12 பேர் கைது
சிவகாசி பகுதியில் சூதாடிய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் தேன் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு காசு வைத்து சூதாடிக்கொண்டு இருந்த சக்திவேல் (வயது 29), இருளாண்டி (40), சீனிக்குமார் (50), ஜெயக்குமார் (37), மருதுபாண்டி (29), சின்னப்பாண்டி (60), வேலுச்சாமி (45), சிலம்பரசன் (32), அதவன் (47), சுப்புராஜ் (47), பால் பாண்டி (39), ராஜகோபால் (54) ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1720-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.