கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

பொள்ளாச்சியில் மருந்து வராததால் கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-05-28 18:44 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மருந்து வராததால் கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொரோனா தடுப்பூசி 

பொள்ளாச்சி வருவாய் கோட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நாச்சிமுத்து பிரசவ விடுதியில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கு 18 வயது முதல் 44 வயது வரை உள்ள 700 பேருக்கும், கோவிசீல்டு தடுப்பூசியும், 45 வயதிற்கு மேற்பட்ட 300 பேருக்கு முதல் அல்லது 2-வது தவணை தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

பொதுமக்கள் ஏமாற்றம் 

இதையடுத்து பொள்ளாச்சி மட்டுமின்றி ஆனைமலை, கோட்டூர், நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நாச்சிமுத்து பிரசவ விடுதிக்கு வந்தனர். ஆனால்  மருந்துகள் வராததால் தடுப்பூசிபோடவில்லை.
 
அத்துடன் பிரசவ விடுதியின் நுழைவு வாயில் மூடப்பட்டு, தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு வைக்கப் பட்டு இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, பொள்ளாச்சிக்கு தடுப்பூசி ஏற்றி வந்த வாகனம் திருச்சி அருகே பழுதானது. எனவே குறித்த நேரத்துக்குள் தடுப்பூசி கொண்டு வர முடியவில்லை. எனவே  சனிக்கிழமை கண்டிப்பாக தடுப்பூசி போடப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்