திருச்சி வந்த ரெயிலில் பெண்ணிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

திருச்சி வந்த ரெயிலில் பெண்ணிடம் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-05-28 18:39 GMT
திருச்சி, 
திருச்சி வந்த ரெயிலில் பெண்ணிடம் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 63), இவரது மனைவி தெய்வானை (55). இவர்கள் இருவரும் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 26-ந்தேதி சென்னையிலிருந்து மதுரை  சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர். இந்த ரெயில் அன்று நள்ளிரவு 2.30 மணி அளவில் திருச்சிக்கு வந்தது. இந்த ரெயில் முடுக்குபட்டி உள்ள ரெயில்வே லெவல் கிராசிங்கில் நின்றபோது, அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள் தெய்வானையிடம் இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு ஓடினர். அதில் செல்போன்களும், ஏ.டி.எம். கார்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து, கைப்பையை பறித்துச்சென்ற அரியமங்கலம் வடக்குத் தெருவைச் சேர்ந்த நாகூர் ஹனிபா (21) என்பவரை கைது செய்தார். மேலும் துரைராஜ் (21), சூர்யா (22) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்