இன்று மின்தடை
சிவகங்கை, காளையார்கோவில் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;
காளையார்கோவில்,
காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் காளையார்கோவில் டவுன், சிலையாஊரணி, மாத்துக்கண்மாய், புலிக்கண்மாய் விலக்கு மற்றும் குருங்களிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதேபோல் மறவமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று பளுவூர், உசிலங்குளம், சிலுக்கபட்டி, சாக்கூர், காஞ்சிரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இத்தகவலை சிவகங்கை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அன்புநாதன் தெரிவித்துள்ளார்.