காரைக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 3 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை-கலெக்டர் விளக்கம்
காரைக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 3 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் 179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 வரை நோய்த்தொற்று பாதித்தவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு செல்கிறார்கள்.
இந்த நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாக ஆதாரமற்ற தகவல்கள் பரப்பி வருவதை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்.மேலும் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை ஆகியவற்றில் தினமும் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு 55 சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பயன்பாட்டிற்காக 217 சிலிண்டர்கள் தயார்நிலையில் இருந்து வருகின்றன.
குறிப்பாக மருத்துவமனையில் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் போதியளவு இருப்பில் உள்ளன. தேவையற்ற வதந்திகளை சிகிச்சை பெறுபவர்களும், பொதுமக்களும் நம்பவேண்டாம். நோய்த்தொற்று குறித்து அறிகுறிகள் தென்பட்ட உடனே காலம் தாழ்த்தாமல் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது மூலம் இழப்பு என்பது முற்றிலும் தவிர்க்கப்படும் என்பதை உணர்ந்து பொதுமக்கள் பாதுகாப்புடன் இருந்திட வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
காரைக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 3 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
3 பேர் பலி
காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் 179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 வரை நோய்த்தொற்று பாதித்தவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம்(27-ந்தேதி) அன்று சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 3 பேர் அதிக நோய்த்தொற்று பாதிப்புடனும் மற்றும் இணை நோய் உள்ளதன் காரணமாக இறந்துள்ளார்கள்.
ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை
அதுமட்டுமன்றி 0.234 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயார்நிலையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவுவதை கருத்தில் கொண்டு காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 200 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் 100 படுக்கைகள் சாதாரண வசதியுடனும், அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், 50 படுக்கைகள் சாதாரண வசதியுடனும் அமைக்கப்பட்டு மருத்துவக்குழு முழுக்கண்காணிப்பில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
வதந்திகளை நம்ப வேண்டாம்
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.