புதிதாக 421 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-05-28 17:49 GMT
புதுக்கோட்டை, மே.29-
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 2 பேர் இறந்தனர்.
421 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 421 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 849 ஆக உயர்ந்தது.
கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 307 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 806 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு தற்போது மருத்துவமனைகளில் 3 ஆயிரத்து 848 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பேர் சாவு
இந்தநிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வந்த 51 வயது ஆண், 65 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 195 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்