நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகினர்.

Update: 2021-05-28 17:19 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 16 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று புதிதாக 461 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் 324 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 448 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 33 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் 82 பேர் இறந்தனர். மீதமுள்ள 3 ஆயிரத்து 333 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 351 ஆக்சிஜன் படுக்கைகளில் 334 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 17 படுக்கைகள் காலியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்