மஞ்சூரில் நாயை கவ்வி சென்ற சிறுத்தைப்புலி

மஞ்சூரில் சிறுத்தைப்புலி திடீரென நாயை கவ்வி சென்றது.

Update: 2021-05-28 17:18 GMT
மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மஞ்சூர் போலீஸ் நிலையம் எதிரே ஒரு வளர்ப்பு நாய் படுத்திருந்தது. 

அப்போது சாலையோரம் உள்ள புதருக்குள் இருந்து வெளியே வந்த சிறுத்தைப்புலி திடீரென நாயை கவ்வியது. சத்தம் கேட்டு போலீசார் வெளியே வந்தனர் உடனே நாயை புதருக்குள்  சிறுத்தைப்புலி இழுத்து சென்றது. இந்த காட்சி போலீஸ் நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. 

ப்பகுதியில் மின்வாரிய குடியிருப்புகள் இருக்கிறது. சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் சிறுத்தைப்புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்