செய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி மாணவன் கைது

செய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி மாணவன் கைது;

Update: 2021-05-28 17:09 GMT
செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி வெளிநாட்டில் கூலித் தொழில் செய்து வருகிறார். இவர்களது 8 வயது சிறுமி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 13-த் தேதி சிறுமியின் பாட்டி 100 நாள் வேலைக்கு சென்றிருந்த போது தனது பேத்தியும் அழைத்துச் சென்றார்.

 அப்போது அங்கு வந்த விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதனை வெளியில் சொன்னால் உன்னையும் உனது பாட்டியையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

 இதுகுறித்து சிறுமியின் பாட்டி செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்