வேலூரில் போலீஸ் நிலையம் முன்பு படுத்து பெண் தர்ணா
வேலூரில் போலீஸ் நிலையம் முன்பு படுத்து பெண் தர்ணா
வேலூர்
-
வேலூர் நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் கஜா என்ற கிருஷ்ணமூர்த்தி. இவர் நடைபாதை வியாபாரிகளுக்கு கடை அமைப்பது தொடர்பாக அடையாள அட்டை தன்னிச்சையாக வழங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். இந்த நிலையில் அவர் மீது பொய்யாக திட்டமிட்டு புகார் அளித்து கைது செய்துள்ளதாக கூறி அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் வடக்கு போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.
அப்போது அவர் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி போலீஸ் நிலையம் முன்பு தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.