வாணியம்பாடியில் நர்ஸ் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி

வாணியம்பாடியில் நர்ஸ் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி

Update: 2021-05-28 16:46 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ரங்கநாயகி (வயது 53). இவர் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரங்கநாயகி காய்ச்சல் காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்..

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து விட்டார். இவரது கணவர் ரவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விஷவாயு தாக்கி இறந்து விட்டார். இவர்களுக்கு சூரியநாராயணன் (வயது 28), கோகுல் (வயது 26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 

சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (65) என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். 

மேலும் செய்திகள்