திருச்செந்தூர் விபத்தில் பெட்டிக்கடைக்காரர் பலி
திருச்செந்தூரில் நடந்த விபத்தில் பெட்டிக்கடைக்காரர் பலியானார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே வள்ளிவிளை நடுத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் பாலமுருகன் (வயது 40). இவர் குமாரபுரத்தில் பெட்டிகடை நடத்தி வந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் பாலமுருகன் தனது மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூரிலிருந்து குமாரபுரம் நோக்கி நெல்லை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள கேஸ் ஏஜென்சி அருகில் சென்ற கொண்டிருந்த போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த தளவாய்புரம் வன்னியங்காடு செல்வகுமார் மகன் பார்வதிமுத்து (21) ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் பாலமுருகன் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.. இதில் பாலமுருகன் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் பாலமுருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பார்வதிமுத்துவுக்கும் படுகாயம் ஏற்பட்டது. முதல் சிகிச்சைக்கு பின்னர், பாலமுருகன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். சம்பவம் குறித்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பாலமுருகனுக்கு திருமணமாகி