இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்
மதுரையில் இன்ஸ்பெக்டர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை,மே
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சேதுமணிமாதவன். சம்பவத்தன்று போலீஸ் நிலையத்திற்கு சென்ற அந்த பகுதி தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனக்கு பிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவியது. அந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையில் மதுரை நகரில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் 5 பேர் நேற்று திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதன் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். மேலும் எஸ்தர் (குற்ற பதிவேடு பிரிவு) - ஜெய்ஹிந்த்புரம் சட்டம், ஒழுங்கு பிரிவு, செல்வி (நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு) - தெற்குவாசல் சட்டம், ஒழுங்கு, வேதவள்ளி (தெற்குவாசல்) - செல்லூர் குற்றப்பிரிவு, ராதா (செல்லூர்) - காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர்.