கோவில்பட்டியில் கொரோனாவுக்கு முன்னாள் ராணுவவீரர் மனைவியுடன் பலி
கோவில்பட்டியில் கொரோனாவுக்கு முன்னாள் ராணுவவீரர் மனைவியுடன் பலியானார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே கொரோனாவுக்கு முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் பலியானார்.
கொரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 72). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி புஷ்பலட்சுமி (63). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் பெருமாள்சாமி, புஷ்பலட்சுமி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர்களை கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
தம்பதி பலி
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருமாள்சாமியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும், புஷ்பலட்சுமியை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ந்தேதி புஷ்பலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
தொடர்ந்து பெருமாள்சாமியும் சிகிச்சை பலனின்றி கடந்த 25-ந்தேதி உயிரிழந்தார். கொரோனாவுக்கு முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.