போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

திருப்பூர் நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடக்கூறி போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-05-28 11:49 GMT
திருப்பூர்
திருப்பூர் நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடக்கூறி போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கோர தாண்டம் ஆடி வருகிறது. அந்த அளவிற்கு பாதிப்பு இருந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த வாரம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைத்தார்.
 வாக்குவாதம்
அதன் பின்னர் தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலீசார் மூலம் குறிப்பிட்ட அளவு டோக்கன் கொடுத்து, டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை தடுப்பூசி போட 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட பலர் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டது. இதன் பின்னர் தடுப்பூசி முடிந்துவிட்டது.
 நாளை இன்று போடப்படும் என அங்கிருந்த போலீசார் போலீசார் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் தடுப்பூசி தங்களுக்கு போட வேண்டும் என சில பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
-------
படம் உள்ளது.
------

----
Reporter : S.Thiraviya Raja  Location : Tirupur - Tirupur

மேலும் செய்திகள்