டெல்லியில் இருந்து 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு அரசின் போா்க்கால நடவடிக்கையால் குறைந்து வருகிறது.

Update: 2021-05-28 03:46 GMT

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதற்காக கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. அத்துடன் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை தமிழகத்திலேயே கூடுதலாக உற்பத்தி செய்யவும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்தநிலையில் டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் சென்னை பழைய விமான நிலையம் வந்தது. அதில் முககவசங்கள், மருத்துவ பரிசோதனை கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்தன. அந்த பாா்சல்களை விமானத்தில் இருந்து இறக்கி தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். பின்னர் அவைகளை வாகனம் மூலம் சென்னையில் உள்ள ஓமந்தூராா் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்