சேலம் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-05-27 22:33 GMT
சேலம்:
சேலம் அருகே உள்ள தாதம்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 85). இவருடைய மனைவி தெய்வானை (75). ராமசாமி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தெய்வானை தூங்கச்சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து ராமசாமி, தனது மனைவி படுத்து இருந்த அறைக்கு சென்று பார்த்து உள்ளார்.
அப்போது தெய்வானை தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தெய்வானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்