ஊரடங்கை மீறீய 44 பேர் மீது வழக்குப்பதிவு

ஊரடங்கை மீறீய 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2021-05-27 20:14 GMT
அன்னவாசல்
அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் முககவசம் அணியாதவர்கள், தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் என 34 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல, மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் மற்றும் போலீசார் நேற்று ஆவூர், ஆம்பூர்பட்டி நால்ரோடு, பேராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர்பட்டி நால்ரோடு வழியாக ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்