ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட மளிகை கடைக்கு சீல்

ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது

Update: 2021-05-27 19:54 GMT
அறந்தாங்கி
 தமிழக அரசு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று ஊரடங்கை மீறி அறந்தாங்கியில் மளிகை கடை ஒன்று திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வருவதாக தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங்குக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், கிராம நிர்வாக அலுவலர் மோகன் ஆகியோர் முன்னிலையில் தாசில்தார் அந்த மளிகை கடைக்கு சீல் வைத்தார்.

மேலும் செய்திகள்