துறையூர் அருகே மாற்றுத்திறனாளி மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது

துறையூர் அருகே மாற்றுத்திறனாளி மகளை கா்ப்பமாக்கிய தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-27 19:33 GMT

முசிறி, 
துறையூர் அருகே மாற்றுத்திறனாளி மகளை கா்ப்பமாக்கிய தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மாற்றுத்திறனாளி மகள்

துறையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 61 வயது கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவி இறந்துவிட்டார். கூலித்தொழிலாளியின் 36 வயதான மூத்த மகள் மாற்றுத்திறனாளி.
அவரால் பேச முடியாது. கை, கால்களை அசைக்க முடியாது. அவரை கூலித்தொழிலாளியின் தாயார் கவனித்து வருகிறார். இளைய மகளுக்கு திருமணம் ஆகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். 

கர்ப்பமாக்கிய தந்தை

இந்தநிலையில், மாற்றுத்திறனாளி பெண் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார். 
அவரிடம் விசாரித்ததில் அந்த கர்ப்பத்துக்கு அவருடைய தந்தை தான் காரணம் என்று தெரியவந்தது.இதுகுறித்து மாற்றுத்திறனாளி பெண்ணின் தங்கை முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்