மது விற்ற 5 பேர் கைது

சாத்தூர் பகுதியில் மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-27 19:09 GMT
சாத்தூர், மே.
சாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பேக்டர் செய்யது இப்ராகிம் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கேரணம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற அனுப்பன்குளத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 31) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுரை பஸ் நிறுத்தம் அருகில் திருவிருந்தான்பட்டியை சேர்ந்த வைரமுத்து (38), வடக்கு ரதவீதியில் சாத்தூரை சேர்ந்த பாண்டியன் (52) ஆகியோரை மதுபாட்டில் விற்றதாக போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் அம்மாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பேக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ராமலிங்காபுரத்தில் வைத்து மதுபாட்டில் விற்ற வீரவாரெட்டி (வயது 59) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்