தொகுப்பூதியத்தில் பணிபுரிய மருத்துவ அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம்
தொகுப்பூதியத்தில் பணிபுரிய மருத்துவ அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
சென்னை மருத்துவக்கல்வி இயக்குனரின் ஆணையின்படி, கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கொரோனா சிகிச்சை மையங்களுக்கு 6 மாத காலத்திற்கு ரூ.60 ஆயிரம் மாத ஊதியத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நேர்காணல் மூலம் மருத்துவ அலுவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பமுள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் மேற்படிப்பு முடித்துள்ள மருத்துவ அலுவலர்கள் உடனடியாக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரை நேரில் அணுகி ஆதார் அட்டை மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.இந்த தகவலை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.