சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் தப்பளம்குண்டு திடல் தெருவைச் சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் பால் (வயது 60). கூலி தொழிலாளியான இவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.