கொரோனா தடுப்பூசி முகாம்

கீழப்பூங்குடி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

Update: 2021-05-27 18:32 GMT
சிவகங்கை,

சிவகங்கை ஒன்றியம் கீழப்பூங்குடி ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தி்ல் நடைபெற்றது. இதில் சிவகங்கை தொகுதி செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.
முகாமில் சிவகங்கை ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கோமதி தேவராஜ், பில்லூர் ராமசாமி, கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச்செயலாளர் கருணாகரன், ஒக்கூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர், கீழப்பூங்குடி ஒன்றிய கவுன்சிலர் பிரியாலோகு, ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவர் டாக்டர் நெவன்பாபு தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

மேலும் செய்திகள்