தீயில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த பரிதாபம்

தீயில் சிக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2021-05-27 18:27 GMT
விருதுநகர்,மே.
விருதுநகர் அல்லம்பட்டி கந்தன் தெருவைச் சேர்ந்தவர் மேரி (வயது 70). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மகன்களின் பராமரிப்பில் இருந்த மூதாட்டி மேரி நடக்க முடியாத நிலையில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவரது மகன் லெனின் தாய் மேரி வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் கட்டிலில் எரிந்த துணிகளுக்கு மத்தியில் தீயில் கருகி இறந்து கிடந்தார். இது பற்றிய புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்