கரூர் உழவர் சந்தை-காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ெதாடங்கியது

கரூர் உழவர் சந்தை-காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது.

Update: 2021-05-27 18:20 GMT
கரூர்
கொரோனா தடுப்பூசி
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக தொற்று தடுப்பு நடவடிக்கையாக கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டு உள்ளது. இதனால் நகராட்சி சார்பில் வேன்கள் மூலம் கரூர் நகராட்சிக்குட்ட அனைத்து வார்டுகளிலும் உழவர் சந்தை விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கரூர் பஸ் நிலையத்தில் மொத்த விற்பனை தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இதில் காலை 3 மணி முதல் 9 மணி வரை செயல்பட்டது. 
இதில் கரூர் மாவட்ட மட்டுமல்லாது திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வியாபாரிகள் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய வருகின்றனர். இதை யடுத்து நேற்று கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி  செலுத்தும் பணி தொடங்கியது. அப்போது கரூர் நகராட்சி கமிஷனர் சுதா உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
வங்கி ஊழியர்கள்
இதேபோன்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. இதேபோல் கரூர் செங்குந்தபுரம் 80 அடி சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், முன்னோடி வங்கி அலுவலகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் வங்கி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்