வேப்பனப்பள்ளி அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு தனியார் பள்ளி ஆசிரியர் பலி

வேப்பனப்பள்ளி அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு தனியார் பள்ளி ஆசிரியர் பலியானார்.

Update: 2021-05-27 18:17 GMT
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு தனியார் பள்ளி ஆசிரியர் பலியானார்.
தனியார் பள்ளி ஆசிரியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜோடுகொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 37). இவர் திருப்பத்தூர் மாவட்டம் இருமத்தூர் கிராமத்தில் தங்கி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக அவரது சொந்த ஊரான ஜோடுகொத்தூர் கிராமத்திற்கு சின்னராஜ் வந்தார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
கருப்பு பூஞ்சைக்கு பலி
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
 இதைத்தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான ஜோடுகொத்தூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பலியான சின்னராஜுக்கு மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
கருப்பு பூஞ்சை நோய்க்கு வேப்பனப்பள்ளி பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்