கணவருக்கு கொரோனா தொற்று;பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கணவருக்கு கொரோனா தொற்றால் மனம் உடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லாவி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா திப்பம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி சிந்தாமணி (வயது 40). இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், சிந்தாமணியின் கணவர் மூர்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன வேதனையுடன் இருந்த சிந்தாமணி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.