போலீஸ் இன்ஸ்பெக்டரின் திருமணநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
போலீஸ் இன்ஸ்பெக்டரின் திருமணநாள் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.
கரூர்
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இரவு, பகல் என்று பாராமல் பணி செய்யும் போலீசார் தங்களது குடும்பத்தையும் மறந்து பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட நாட்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கரூர் டவுன் போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தனது திருமணநாளையும், கரூர் ஆயுதப்படை பெண் போலீஸ் நித்தியாவதி தனது பிறந்தநாளையும் கொண்டாடாமல் பணிக்கு வந்தனர். இதையடுத்து 2 பேரின் செயலை பாராட்டும் விதமாக திருமாநிலையூர் போலீஸ் செக்போஸ்ட் அருகே சக போலீசார் அவர்களுக்கு கேக் வாங்கி வந்து வெட்டினர். இதில் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைகண்ணு உள்ளிட்ட சக போலீசார் கலந்து கொண்டு 2 பேருக்கும் கேக் ஊட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனால் அவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.