திருச்செங்கோட்டில் விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பலி
திருச்செங்கோட்டில் விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பலி;
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு சந்தைப்பேட்டை மேடு பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் ஞானபிரகாஷ் (வயது 55). இவர் சம்பவத்தன்று திருச்செங்கோடு- ஈரோடு சாலையில் வேளாளர் காலனி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கும் போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஞானபிரகாஷ் சிகிச்சை பலன்இன்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ஞானபிரகாஷ் திருச்செங்கோடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.