கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏரியூருக்கு 600 மதுபாக்கெட்டுகள் கடத்தி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏரியூருக்கு 600 மதுபாக்கெட்டுகள் கடத்தி வந்து விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏரியூர்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏரியூருக்கு 600 மதுபாக்கெட்டுகள் கடத்தி வந்து விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுபாக்கெட்டுகள் கடத்தல்
ஏரியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாக்கெட்டுகள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஏரியூர் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.
இந்த ரோந்தின் போது, ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டி புளியமரத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 33) மற்றும் நெருப்பூரைச் சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி சாமிக்கண்ணு அம்மாள் (55) ஆகியோரிடம் இருந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு ைவத்திருந்த 150 மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவு
மேலும் இதே பகுதியில் 450 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மதுபாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்து வந்த 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 2 பேரையும் ஏரியூர் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.