திருச்செங்கோட்டில் விதிமுறைகளை மீறி இயங்கிய பால் பண்ணைக்கு சீல்
திருச்செங்கோட்டில் விதிமுறைகளை மீறி இயங்கிய பால் பண்ணைக்கு சீல்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையிலான போலீசார் நேற்று திருச்செங்கோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேலூர் சாலையில் உள்ள கார்த்திக் என்பவரது பால் பண்ணையில் விதிமுறைகளை மீறி காய்கறி மற்றும் மற்ற பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டு அங்கு வந்த வருவாய்த்துறையினர் அந்த பால் பண்ணையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் அவசியம் இன்றி தெருவில் சுற்றித்திரிந்த 24 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்/
======