காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள்.
காரைக்குடி,
காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். இது தொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
புதிய மையம் தொடக்கம்
அதனையொட்டி காரைக்குடியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மற்றொரு பிரிவு ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் புதிய சிறப்பு சிகிச்சை மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்கள். பழைய அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள புதிய கொரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
போலீஸ் குவிப்பு
அதனையொட்டி மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கோட்டாட்சியர் சுரேந்திரன், தாசில்தார் அந்தோணிராஜ் ஆகியோர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை பார்வையிட்டனர்.அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
பேட்டி
பின்னர் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காரைக்குடியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிய கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டவுடன் காரைக்குடியில் மற்ற இடங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் புதிதாக தொடங்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்கள்.
3 பேர் சாவு
இவ்வாறு அவர் கூறினார்.