890 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு

890 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு;

Update: 2021-05-27 17:39 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் 890 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக கோவை மாநகராட்சி யில் 602 இடங்கள் அடைக்கப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ்

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் வீரியம் அதிதீவிரமாக உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடு தனி மைப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அங்கு கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தூவப்படுகிறது. 

மேலும் ஒரே வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிகம் பேர் தொற்றுக்கு ஆளானால் அந்த பகுதி இரும்புத்தகரம் கொண்டு அடைக்கப்படுகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் வரை கோவை மாவட்டத்தில் 890 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் 602 இடங்கள் அடைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது

கட்டுப்பாட்டு பகுதிகள்

கோவை மாநகராட்சியில் 602 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. அது போன்று சூலூர் வட்டாரத்தில் 14, துடியலூரில் 30, மதுக்கரையில் 70, தொண்டாமுத்தூரில் 10, பொள்ளாச்சி தெற்கில் 8, பொள்ளாச்சி வடக்கில் 4, பொள்ளாச்சி நகராட்சியில் 76,

 காரமடையில் 18, ஆனைமலை மற்றும் சர்க்கார்சாமக்குளத்தில் தலா 5, கிணத்துக்கடவில் 1, அன்னூரில் 24, மேட்டுப்பாளையம் நகராட்சியில் 23 என மொத்தம் 890 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 அந்த பகுதிகளில் கம்பு மற்றும் இரும்புத்தகரம் வைத்து அடைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. 

இதில் மாநகராட்சி பகுதியான நியூசித்தாபுதூரில் உள்ள ஒரு சில அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. எனவே அங்கு தகரம் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவை மாநகராட்சி பகுதியில் கடந்த 7 நாட்களில் மட்டும் 56.77 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

 தொற்று சதவீதம் எவ்வளவு?

இதில்,புறநகர் பகுதிகளான சூலூர் வட்டாரத்தில் 10.4 சதவீதம், துடியலூரில் 6.12 சதவீதம், மதுக்கரையில் 5.07, தொண்டாமுத்தூரில் 2.75, பொள்ளாச்சி தெற்கில் 1.69, பொள்ளாச்சி நகராட்சியில் 1.05, காரமடையில் 3.59, சர்க்கார் சாமக்குளத்தில் 2.38 சதவீதம், 

ஆனை மலையில் 3.12, சுல்தான்பேட்டையில் 1.48, பொள்ளாச்சி வடக்கில் 1.13, கிணத்துக்கடவில் 1.52, அன்னூரில் 1.83, மேட்டுப்பாளையம் நகராட்சி யில் 1.20, வால்பாறை நகராட்சியில் 0.27 சதவீதமும் என புறநகர் பகுதிகளில் மொத்தம் 43.23 சதவீதம் பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 

முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்