கொரோனா நிதிக்கு ரூ.7,300 வழங்கிய பெண் தொழிலாளர்கள்
கொரோனா நிதிக்கு ரூ.7,300 பெண் தொழிலாளர்கள் வழங்கினர்.;
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோஸ்லேண்ட் தேயிலை தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் பெண் தொழிலாளர்கள் 40 பேர் வீட்டில் சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.7 ஆயிரத்து 300-ஐ கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.
இந்த பணத்தை பெண் தொழிலாளர்கள் பந்தலூர் தாசில்தார் தினேஷ்குமாரிடம் வழங்கினர். அவர்களை தாசில்தார் பாராட்டினார்.