தச்சமொழி கோவிலில் பவுர்ணமி பூஜை

தச்சமொழி கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.

Update: 2021-05-27 15:05 GMT
சாத்தான்குளம்:
தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முத்துமாரியம்மன். ஸ்ரீமுத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் பக்தி பாடல்கள் பாடி அம்பாளை பரவசபடுத்தினர். இதில் பக்தர்கள் அரசு விதிப்படி முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை வழிப்பட்டனர். இதேபோல் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சுந்தராட்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு 108 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. கொரோனா தொற்று நீங்கி அனைவரும் சுகமாக வாழ வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 

மேலும் செய்திகள்