கிரிக்கெட் விளையாடியவர்களுக்கு நூதன தண்டனை

ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடியவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டது.

Update: 2021-05-27 14:22 GMT
பெரியகுளம்:

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை மீறி, பெரியகுளத்தை அடுத்த சருத்துப்பட்டி அருகே புறவழிச்சாலை பகுதியில் முக கவசம் அணியாமல் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடினர்.

இந்தநிலையில் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஊரடங்கை மீறி, கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவர்களை அவர் பார்த்தார்.

 இதனையடுத்து அங்கு சென்ற போலீஸ் துணை சூப்பிரண்டு, கிரிக்கெட் விளையாடிய வாலிபர்களுக்கு நூதன தண்டனை வழங்கினார்.
அதாவது அனைவரின் வலது கையை நீட்டி உறுதிமொழி எடுக்க வைத்தார்.

 கொரோனா விதிகளை கடைபிடித்து வீட்டிலேயே இருப்பேன், வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன் என்று கூறி சுமார் 1 மணி நேரம் அவர்கள் உறுதி எடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி, வீடுகளிலேயே இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்