ஆம்பூர் அருகே 100 படுக்கைகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம்
ஆம்பூர் அருகே 100 படுக்கைகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம்;
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த கோவிந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தினை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, எம்.பி.கள் கதிர் ஆனந்த், அண்ணாதுரை, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், நல்லதம்பி, ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.