கொரோனா தடுப்பூசி

திருப்பூர் பகுதிகளில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து செலுத்தி செல்கிறார்கள். கொரோனா தடுப்பூசி;

Update: 2021-05-27 12:03 GMT
திருப்பூர்
திருப்பூர் பகுதிகளில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து செலுத்தி செல்கிறார்கள்.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதியில் இருந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பலரும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வந்து கொண்டிருக்கிறார்கள். அதன்படி மாநகர் பகுதிகளில் தடுப்பூசி செலுத்த பலரும் நீண்ட வரிசையில் காத்துநின்று தடுப்பூசி செலுத்தி சென்று கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட வரிசை
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது
திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு தேவையான தடுப்பூசி அனைத்தும் வந்துவிட்டது. இதனால் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே மாநகர் பகுதியில் அரசு தலைமை மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் சிரமம் போக்கும் வகையிலும், அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் தற்போது திருப்பூர் நஞ்சப்பா பள்ளி மற்றும் டி.எஸ்.கே. ஆரம்ப சுகாதார நிலையம், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆஸ்பத்திரி என பல்வேறு பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் உற்சாகமாக தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். கூட்டம் அதிகமாக இருப்பதால் டோக்கன் வழங்கப்படுகிறது. இதனை பெறுகிற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி செலுத்தி செல்கிறார்கள். முன்னதாக தடுப்பூசி செலுத்துகிறவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, செலுத்தப்படுகிறது. இதுபோல் கொரோனா பரிசோதனையும் அந்த பகுதிகளிலும் நடந்து வருகிறது. கொரோனா அறிகுறி மற்றும் சந்தேகங்கள் இருக்கிறவர்களும் கொரோனா பரிசோதனை செய்கிறார்கள். நேற்று ஒரே நாளில் மாநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குன்னத்தூர்
குன்னத்தூர் அரசு நடுநிலை பள்ளியில் 18 வயதிற்கு மேல் 44 வயதிற்குள் உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் கடந்த 3 நாட்களாக  தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். டோக்கன் பெற்றுக்கொண்ட 200 நபருக்கு தடுப்பூசி போட்டபின் அடுத்தநாள் போடுவதற்கு இருநூறு நபருக்கு டோக்கன் கொடுத்து விடுகிறார்கள். இவ்வாறு கடந்த 3 நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. டோக்கன் பெற்றுக்கொண்ட பொதுமக்கள் காலை 7.30 மணி முதலே வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுகிறார்கள். 
கொரோனோ பரிசோதனை செய்ய வரும் பொதுமக்கள் மற்றும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தனியாக உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விடுவதால தடுப்பூசி போட வரும் பொதுமக்களுக்கு எந்தவிதமான சிரமமும் இல்லாமல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போட வரும் பொதுமக்களுக்கு குன்னத்தூர் போலீசார் உதவி வருகிறார்கள்.
--------------


----

மேலும் செய்திகள்