வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது

Update: 2021-05-27 11:56 GMT
அனுப்பர்பாளையம்
திருப்பூர் 15 வேலம்பாளையம் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார்வயது 48. சம்பவத்தன்று நள்ளிரவு ரவிக்குமாரின் மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டுக் கதவின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த 2 செல்போன்களை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக நாகை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் 37என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்