நாகை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 130 பேர் மீது வழக்கு
நாகை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 130 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்,
தளர்வுகள் இல்லாத ஊரடங்கையொட்டி நாகை மாவட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வந்த வாகனங்கள் மட்டும் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தவர்களிடம் இருந்து 120 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், ஒரு ஆட்டோ என மொத்தம் 122 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 130 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.