செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,302 பேர் பாதிப்பு 38 பேர் சாவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,302 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 38 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-05-27 00:50 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 825-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 432 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1617-ஆக உயர்ந்தது. இவர்களில் 15 ஆயிரத்து 776 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 909 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 102-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 188 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்தனர்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 870- ஆக உயர்ந்துள்ளது. 7044 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்