மாரண்டஅள்ளியில் மது கடத்தி வந்த 2 பேர் கைது ரூ.2 லட்சம் பாட்டில்கள், சொகுசு கார் பறிமுதல்
மாரண்டஅள்ளியில் மது கடத்தி வந்த 2 பேர் கைது ரூ.2 லட்சம் பாட்டில்கள், சொகுசு கார் பறிமுதல்
பாலக்கோடு, மே.27-
மாரண்டஅள்ளியில் காரில் மது கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இ-பதிவு இல்லை
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் உள்ள 4 ரோடு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு மாரண்டஅள்ளி போலீசார் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை சொகுசு கார் ஒன்று தேன்கனிக்கோட்டையில் இருந்து மாரண்டஅள்ளி நோக்கி வந்தது.
அப்போது சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா அந்த காரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார். அதில் காரில் வந்தவர்கள் உடல் நலம் சரியில்லாததால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறினர். ஆனால் அவர்களிடம் உரிய இ-பதிவு மற்றும் மருத்துவ ஆவணங்கள் இல்லாததால் சந்தேகமடைந்த போலீசார் காரை பரிசோதனை செய்தனர்.
கைது
அப்போது காரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 1,344 குவார்ட்டர் பாட்டில்கள் மறைத்து கடத்தி கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 28 அட்டை பெட்டியில் கொண்டு வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் தொடர் விசாரணையில் காரில் வந்தவர்கள் கரூர் மாவட்டம் காந்தி நகரை சேர்ந்த தியாகு (வயது 34), நாமக்கல் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (34) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 ேபரையும் கைது செய்த போலீசார் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
===