அரக்கோணம் சுடுகாட்டில் உடல்களை சரியாக புதைக்காததால் துர்நாற்றம்
அரக்கோணம் சுடுகாட்டில் உடல்களை சரியாக புதைக்காததால் துர்நாற்றம்
அரக்கோணம்
அரக்கோணம் நகராட்சிக்கு சொந்தமான சுடுகாடு நேருஜி நகரில் உள்ளது. இந்த சுடுகாடு சாலையின் இருபக்கமும் உள்ளது. இந்தநிலையில் ஒருபக்கம் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் பிணங்களை புதைத்து அடக்கம் செய்து வருகின்றனர். இந்த சுடுகாட்டில் சரியாக பள்ளம் தோண்டி உடல்கள் புதைக்கப்படவில்லை. மேலும் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட பிணங்கள் சரியாக மூடாமல் சமாதிகளுக்கு நடுவே வீசப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.
பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்ட சில பிணங்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருவதை முறையாக அடக்கம் செய்ய அரக்கோணம் நகராட்சி ஏற்பாடு செய்ய நகராட்சி அலுவலர்களிடம் சு.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று காலை நகராட்சி அதிகாரிகள் நேரடியாக சுடுகாட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது சரியாக மூடாத பிணங்களின் கை கால்கள் வெளியே தெரிந்து துர்நாற்றம் வீசியது. அதை சரிசெய்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.