சிங்காரப்பேட்டை அருகே ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்
சிங்காரப்பேட்டை அருகே ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்
கல்லாவி:
சிங்காரப்பேட்டை ஊராட்சி நார்சாம்பட்டி பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக சிங்காரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நார்சாம்பட்டி அம்பேத்கர் நகரில் சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சங்கர் (வயது 42) என்பவர் கர்நாடக மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். போலீசார் வருவதை கண்ட சங்கர் மதுபாட்டில்களை அங்கேயே வைத்து விட்டு ஓடி விட்டார். இதையடுத்து அங்கிருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான சங்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.
======