மேச்சேரி அருகே செம்பனூர் கூட்டுறவு கடன் சங்கவருகை பதிவேட்டில் முறைகேடு? செயலாளரிடம் விவசாயிகள் புகார்

கூட்டுறவு கடன் சங்கவருகை பதிவேட்டில் முறைகேடு?

Update: 2021-05-26 22:28 GMT
மேச்சேரி:
மேச்சேரி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணியாளர் வருகை பதிவேட்டில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க கோரி சங்க உறுப்பினர்கள், விவசாயிகளுடன் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
வருகை பதிவேடு
மேச்சேரி அருகே செம்பனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் அரங்கனூர் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். 
இந்த கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பணிக்கு வராமலே வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு சென்றதாக புகார் எழுந்தது.
புகார்
இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நேற்று சங்க உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் சங்க செயலாளரிடம், வருகை பதிவேட்டில் முறைகேடாக கையெழுத்திட்ட பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அப்போது சங்க செயலாளர் புகார் குறித்து உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பின்பு அங்கிருந்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்