உத்தம சோழபுரத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் 70 படுக்கை வசதியுடன் தொடங்கப்பட்டது
கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்
ஆட்டையாம்பட்டி:
வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் அரியானூர் அருகே உத்தமசோழபுரம் பகுதியில் மாநில வேளாண்மை விற்பனை கூடத்தில் பயிற்சியாளர் வளாகம் உள்ளது. இங்கு கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு சிறப்பு சிகிச்சை மையம் 70 படுக்கை வசதியுடன் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதில் கொரோனா தொற்று உள்ள 7 பேர் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.