மத்திய அரசை கண்டித்து அரியலூரில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

மத்திய அரசை கண்டித்து அரியலூரில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது

Update: 2021-05-26 21:33 GMT
தாமரைக்குளம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் அரியலூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் தங்களது கைகளில் கருப்பு கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஏ.ஐ.டியூ.சி. அலுவலகம் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளருமான தண்டபாணி இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருப்பு கொடி கட்டப்பட்டு மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
கீழப்பழுவூரில், மாடுகளின் கொம்புகளில் கருப்புத் துணி கட்டி மாடு மேய்க்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். இதில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி செந்தில்குமார் மற்றும் வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்