பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்

Update: 2021-05-26 21:05 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 226 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 7,027 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 50 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தநிலையில் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டம் எறையூரை சேர்ந்த 56 வயது ஆண், குன்னம் தாலுகா அந்தூரை சேர்ந்த 66 வயது ஆண், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற துங்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் என மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 4,348 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,626 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்